Connect with us

CINEMA

ஒருவேளை அப்படியா இருக்குமோ..? லண்டனில் ஒரு பெண்ணுடன் இருக்கும் STR… யார் அந்த பெண் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு.  இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பத்து தல’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கம் திரைப்படத்திற்காக வெளிநாடு சென்று தற்போது சிம்பு தன்னுடைய உடலை பிட்டாக வைத்துள்ளார்.

   

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும்  எஸ் டி ஆர் 48  திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்பொழுது இந்தப் படத்தை குறித்த முழு அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது இதில் சிம்பு அண்ணன், தம்பி இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லனாகவும் முட்டி மோத போகிறார் என கூறப்படுகிறது. இதுவரை எஸ்டிஆர் நடிப்பில் வெளியான படங்களில் இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவை பற்றி அதுவும் அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வந்துவிட்டன. தற்போது லண்டனில் இருக்கும் நடிகர் சிம்பு ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அவர் யார் என்ற விவரம் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை. இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top