Connect with us

CINEMA

எனக்கு இவ்ளோ SUPPORT எதிர்பாக்கல… வடிவேலு காமெடி வைத்து பிரதீப் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரல்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்க, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்துள்ளது.

   

பிக் பாஸ் வீடாக இரண்டாக பிரிந்ததிலிருந்ததே டாஸ்க் விளையாட்டிலும் பல புதுமைகள் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தனித்தனியாக பிரிந்து விளையாடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருவராக தோற்கடித்து வருகின்றனர். அப்படித்தான் நேற்றைய எபிசோடிலும் நடந்தது. எவிக்ஷன் லிஸ்டில் இருந்த பிரதீப் தான் அங்கிருந்த ஹவுஸ் மீட்கலால் டார்கெட் செய்யப்பட்டார். ஜோதிகா ,பூர்ணிமா, மாயா, ரவீனா என பல பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க வலியுறுத்தினார்கள்.

 

அது மட்டும் இன்றி பல ஆண் போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூறினார்கள். மொத்தம் அதிக ரெட் கார்டு வாங்கிய அவர் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் நெட்டிசன்களால் இந்த முடிவு ஏற்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக தற்போது வரை இணையத்தில் பல்வேறு பதிவுகளும் கமாண்டுகளும் வெளியாகி வருகிறது. இந்நிலையில்  பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் நன்றி கூறும் விதமாக தனது X தள பக்கத்தில் வடிவேலு காமெடி ஒன்றை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரதீப். மேலும் அவர் அந்த பதிவில் ‘How I feel seeing the social media response for my game’ என்றும், கூட நின்னத்துக்கு நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல ஆர்ட்டிஸ்டா ஆக ட்ரை பண்றேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நல்லா இருங்க. அடுத்த வேலைய பாப்போம் என்று பதிவு செய்து அவர் வெளியிட்ட இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு….

Continue Reading

More in CINEMA

To Top