Connect with us

CINEMA

4 வருடங்களுக்கு பிறகு மாஸ் comeback கொடுத்த பிரபலம்…! ‘லியோ’ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுத்தது இவரா…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ள லியோ திரைப்படம் தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட சாதனை படைக்க தயாராகி வருகிறது. வாரிசு படம் கேரளா, ஓவர்சீஸ் போன்ற இடங்களில் வெற்றிப்பெற்றாலும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்தது. இப்படத்தின் சில சறுக்கல்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என பலர் நடித்துள்ளார்கள்.

   

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் நடக்கவில்லை. எனவே வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது லியோ பட டிரைலர். லியோ பட டிரைலர் வெளியான 20 நிமிடத்திலேயே 1 மில்லியன் லைக்குகளை கடந்து சாதனை படைத்தது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து இருக்கிறார். த்ரிஷாவுக்கு லியோ படத்தில் சின்மயி தான் டப்பிங் பேசி இருக்கிறார். அவர் மீ டு புகார் கொடுத்த பிறகு, டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால், கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார். தற்போது லியோ படம் மூலமாக சின்மயி மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழில்களிலும் அவர் தான் டப்பிங் பேசி உள்ளாராம். அதற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி கூறி, பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சின்மயி.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top