என்ன ஒரு ஆச்சரியம்…! 62 ஆண்டுகளாக தூங்காமல் உயிர்வாழும் 81 வயது முதியவர்…. காரணம் இதுதானா…? வியட்னாமில் வினோதம்…!!

Spread the love

உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ஒரு இரவு கூட சரியாகத் தூங்காவிட்டால் அடுத்த நாள் வேலை செய்ய முடியாது. ஆனால் 62 ஆண்டுகளாக ஒரு நொடி கூடக் கண் மூடி தூங்காத ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் நம்ப முடியுமா?

அறிவியல் படி சில நாட்களுக்கு மேல் தூக்கமின்றி உயிர் வாழ முடியாது.  வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் நொகோக் (81). இவர் 1962-ஆம் ஆண்டு  கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை ஒரு நொடி கூடத் தூங்கவில்லை என்கிறார்.

1942-ல் பிறந்த நொகோக், வியட்நாம் போரின்போது 20 வயதில் அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குணமானாலும் தூக்கம் மட்டும் திரும்பவில்லை. “மருந்து, வீட்டு வைத்தியம், மது கூட முயற்சித்தேன்… ஆனால் தூக்கம் வரவில்லை” என்கிறார்.

அதிசயம் என்னவென்றால், தூக்கமின்றியும் அவர் உயிரோடு இருப்பதோடு, பண்ணையில் வேலை செய்கிறார், வயலில் உழைக்கிறார். அவர் தூங்குவதை யாரும் பார்த்ததில்லை என மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அண்டை வீட்டார் அனைவரும் கூறுகின்றனர். அறிவியலுக்கு சவால் விடும் இவரது வாழ்க்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

3 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

3 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

3 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

5 மணத்தியாலங்கள் ago