மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் ட்விஷா சர்மாவின் மரண விவகாரத்தில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ட்விஷாவின் மாமியாரும், ஓய்வுபெற்ற முன்னாள் பெண் நீதிபதியுமான கிரிபாலா சிங் என்பவரை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு முன்னாள் உயர் நீதித்துறை அதிகாரி வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை போபாலில் உள்ள கிரிபாலா சிங்கின் வீட்டிற்குள் புகுந்த சிபிஐ அதிகாரிகள், பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய பின்னர் மாலை 5:10 மணியளவில் அவரது கைதை முறைப்படி பதிவு செய்தனர். இந்த விசாரணையின் போது, அதிநவீன 3D கேமராக்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு, குற்றம் நடந்த வீட்டின் ஒட்டுமொத்தப் பகுதியையும் சிபிஐயின் தடய அறிவியல் நிபுணர்கள் சல்லடை போட்டுத் தேடி ஆய்வு செய்தனர். கைதான முன்னாள் ஜட்ஜ் மீது புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-ன் கீழ் வரதட்சணை மரணம், கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் கிரிபாலா சிங்கின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த அடுத்த நாளே இந்த அதிரடிக் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ட்விஷா சர்மாவின் உடலில் மரணத்திற்கு முன்பு 7 கடுமையான காயங்கள் இருந்ததையும், அவர் மனரீதியாகக் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் ஆதாரங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள கிரிபாலா சிங் ஒரு ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரி என்பதால், தனது சட்ட நுணுக்க அறிவைப் பயன்படுத்தி அவர் வழக்கின் மிக முக்கியமான ஆதாரங்களை அழித்திருக்கலாம் அல்லது சாட்சிகளைக் கலைத்திருக்கலாம் என்ற கடுமையான சந்தேகத்தையும் நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொண்டது.
கடந்த மே 12 அன்று நடந்த ட்விஷா சர்மாவின் மர்ம மரண வழக்கை மாநில போலீசாரிடமிருந்து அண்மையில் தான் சிபிஐ அதிகாரப்பூர்வமாகக் கையில் எடுத்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு பெண் வீட்டார் தங்களின் மகளை வழி அனுப்பி வைக்கும் ‘விதாய்’ சடங்கின் போது, கிரிபாலா சிங் 2 லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாகக் கேட்டு மிரட்டியுள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து நீடித்த வரதட்சணைக் கொடுமைகள்தான் இந்த இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது என்பது சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டில் கிரிபாலா சிங்கின் மகனும், ட்விஷாவின் கணவருமான வழக்கறிஞர் சமர்த் சிங் கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…