ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்ஜ்பூர் கிராம சந்தைப் பகுதியில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் ஷிவ் குமார் என்ற நபர் தனது வேலை காரணமாகச் சென்றிருந்தபோது, ஒரு கும்பல் அவரைச் வளைத்துப் பிடித்து தெருவில் இழுத்துச் சென்று இரும்புத் தடிகளால் தாக்கியுள்ளது. மேலும், அவர் மீது சிறுநீர் கழித்து அட்டூழியத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாக்லா பான்சந்த் கிராமத்தைச் சேர்ந்த ஷிவ் குமார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, நிலுவையில் உள்ள ஒரு நீதிமன்ற வழக்கே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28 அன்று, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் வழக்கை ஷிவ் குமார் பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 28 அன்று வரவிருக்கும் நிலையில், அவரை வழக்கை திரும்பப் பெறுமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

https://twitter.com/nextminutenews7/status/2089631230526656720/video/1

ஷிவ் குமார் வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இந்த கொடூரமான தாக்குதலை நடத்தி பழிவாங்கியுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவெளியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

தவெகவில் வெடித்த உள்கட்சி மோதல்…. அதிமுகவில் இருந்து தூக்கிய அஸ்திரம்…. செம்மலைக்கு நோ-எண்ட்ரி போட்ட தமிழன் பார்த்திபன்?…..!

தாராபுரம் தொகுதிக்குத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை தவெகவில் இணைந்தார். இருப்பினும், பிரச்சார…

5 minutes ago

“ஸ்டாலினின் செருப்புதான் ஆட்சி செய்கிறதா?”…. திண்டுக்கல் லியோனி பேச்சால் வெடித்த சர்ச்சை…. தமிழக அரசியலில் வெடித்த திடீர் புயல்…!

திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, அண்மையில் நடைபெற்ற திமுக மூத்த தலைவர்…

10 minutes ago

“மன்னிப்பு கேள்.. இல்லனா ஜெயில் தான்”…. மீடியாக்களை அதிரவைத்த எல்.முருகனின் அதிரடி அறிக்கை…. மத்திய அமைச்சரவையில் திடீர் பரபரப்பு….!

தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமாக இருந்த எல்.முருகன் தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து சமூக வலைதளங்களிலும்…

17 minutes ago

200 மீட்டர் தொலைவில் நடந்த அந்த ஒரு விஷயம்… 10 நாட்களாக உள்ளூர் போலீசார் கவனிக்கத் தவறியது ஏன்?…. செஞ்சி சிறுமி வழக்கில் திடுக்கிடும் திருப்பம்…..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது…

22 minutes ago

பாஜகவுடன் கூட்டணியா?…. மத்திய அமைச்சரவையில் திமுக?…. ஆர்.எஸ்.பாரதி போட்ட வெடிகுண்டு…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றித் கழக அரசின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள திமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக மத்திய…

28 minutes ago

மொத்த மானமும் போச்சு!… நடுரோட்டில் கள்ளக்காதல் பஞ்சாயத்து… வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவர்… மனைவியின் ருத்ரதாண்டவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷாலிமார் டவுன்ஷிப் பிரதான சாலையில், குடும்பத் தகராறு காரணமாகத் திடீரென பெரும் சலசலப்பு…

45 minutes ago