ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்ஜ்பூர் கிராம சந்தைப் பகுதியில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் ஷிவ் குமார் என்ற நபர் தனது வேலை காரணமாகச் சென்றிருந்தபோது, ஒரு கும்பல் அவரைச் வளைத்துப் பிடித்து தெருவில் இழுத்துச் சென்று இரும்புத் தடிகளால் தாக்கியுள்ளது. மேலும், அவர் மீது சிறுநீர் கழித்து அட்டூழியத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாக்லா பான்சந்த் கிராமத்தைச் சேர்ந்த ஷிவ் குமார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, நிலுவையில் உள்ள ஒரு நீதிமன்ற வழக்கே காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28 அன்று, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் வழக்கை ஷிவ் குமார் பதிவு செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 28 அன்று வரவிருக்கும் நிலையில், அவரை வழக்கை திரும்பப் பெறுமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2089631230526656720/video/1

   

ஷிவ் குமார் வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், இந்த கொடூரமான தாக்குதலை நடத்தி பழிவாங்கியுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுவெளியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.