#image_title
மழைக்காலம் வந்தாலே பலருக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளுமையான சூழல் ஏற்படும்போது மனதிற்கு இதாமாக இருக்கும். ஆனால் வெயில் காலத்தை விட நாம் கவனமாக இருக்க வேண்டியது மழை காலம் தான். மழைக்காலத்தில் தான் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகும்.
மழைக்காலத்தில் தான் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் இருக்கிறது. காய்ச்சல் இருமல் ஜலதோஷம் போன்ற நோய்களும் கொசுக்களால் ஏற்படும் டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்களும் அதிக அளவில் ஏற்படும். இது போன்ற நேரத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இது தவிர சில உயிரினங்கள் பாம்பு பூரான் போன்றவைகள் மழை நேரத்தில் ஒதுங்க இடம் வேண்டும் என்பதற்காக நம் வீட்டை தேடி வரலாம். அந்த நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம். இதையெல்லாம் மழைக்காலத்தில் நடக்க கூடியதுதான். ஆனால் தேடித்தேடி போய் வீணாக வம்பில் சிக்குவானேன் என்பது போல சென்னை அருகே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
காளான் சைவ பிரியர்கள் அசைவ பிரியர்கள் எல்லாருக்கும் பிடித்தமான உணவு தான். காளான் சிக்கனுக்கு ஒத்த ருசியை கொடுப்பதால் அனைவருக்கும் காளான் என்பது மிகவும் பிடிக்கும். தற்போதைய காலகட்டத்தில் விற்பனைக்கு வரும் காளான்கள் எல்லாம் பண்ணையில் வளர்க்கப்பட்டவை தான். ஆனால் ஒரு சில கிராமங்களில் மழை நேரத்தில் காளான்கள் முளைக்கும். கிராமத்தில் உள்ளவர்கள் அதை பறித்து சமையல் செய்து சாப்பிடுவர்.
ஆனால் மழையில் வளரும் எல்லா காளானையும் நம்மால் சாப்பிட முடியாது. ஒரு சில காளான்கள் நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். அதே போல் சென்னை அருகே திருவள்ளூரை சேர்ந்த ஐந்து பேர் மழையில் முளைத்த காளானை அது என்ன வகை நச்சுத்தன்மை உடையதா என்பதை பாராமல் அதை சமைத்து உண்டதால் வாந்தி வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுபோன்று மழையில் முளைக்கும் காளான்களை ஆராயாமல் சாப்பிடக்கூடாது. நச்சுத்தன்மை அதிகமாக இருக்கும். ஒரு சில நேரம் உயிருக்கு ஆபத்தாக கூட ஆகலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…