“என் பிள்ளையை நானே கொன்னுட்டேனே” மனைவிக்கு வாங்கி வந்த ORS மருந்து… 4 வயது மகனுக்கும் கொடுத்ததால் மரணம்… கதறி அழும் தந்தை…!!

Spread the love

உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய  மனைவி மோகினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததால்  ஒரு மருத்துவக் கடையில் இருந்து மருந்து மற்றும் எலக்ட்ரோலைட்டை வாங்கினார். முதலில் எலக்ட்ரோலைட்டை ஒரு பாட்டிலில் கரைத்து, மனைவிக்கு ஒரு கிளாஸ் எலக்ட்ரோலைட்டைக் கொடுத்து, பின்னர் அதை அவரும் குடித்தார். பின்னர் அதே எலக்ட்ரோலைட் கரைசலை தனது மகன் கிருஷ்ணா ராஜ்புத்துக்கு (4) கொடுத்தார்.  கரைசலைக் குடித்த பிறகு,  ஆஷு வேளைக்கு கிளம்பியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே, ஆஷுவைத் தவிர மற்ற அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்கள் அதிக அளவில் வாந்தி எடுக்கத் தொடங்கினர், மேலும் அவர்களின் நிலை மோசமடைந்தது. அவரது மனைவி உடனடியாக ஆஷுவுக்குத் தகவல் கொடுத்தார். ஆஷு உடனடியாக வீடு திரும்பி  அனைவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மருத்துவமனையில், கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் .

அவரது மனைவி மோகினி மற்றும் மருமகன் ககன் ஆகியோர் இன்னும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் கிடைத்ததும், காகதேவ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் ராஜன் காந்தி, எலக்ட்ரோலைட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது  என்றும், நீரிழப்பு ஒரு பிரச்சனையாக இருந்தால் மட்டுமே எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகாமல் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

திடீர் யு-டர்ன்..! ரூ. 20,000 கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுகிறது தமிழக அரசு..? அதிரடி பின்னணி..!!

தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…

21 minutes ago

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

22 minutes ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

31 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

34 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

40 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

40 minutes ago