“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

Spread the love

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை, அவர் வழக்கம் போல கல்லூரிக்குச் சென்று வருவதாகத் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, பையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மகள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த மாணவியின் தந்தை ஏதோ ஒரு பணிக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது தற்செயலாகத் தனது மகளின் தோழியை வழியில் பார்த்த அவர், “என் மகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் செல்லவில்லை?” என்று விசாரித்துள்ளார். அதற்கு அந்தத் தோழி, “கல்லூரி வரும் 10-ஆம் தேதிதானே திறக்கிறது, அதற்குள் ஏன் செல்ல வேண்டும்?” என்று கூற, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாகத் தனது மகளின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரிடம் பேச முடியாததால் பதற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்து மகளைத் தேடியுள்ளார்.

அப்போது மகளின் அறையில் ஒரு கடிதம் இருப்பதை அவர் கண்டு பிடித்தார். அந்த கடிதத்தில், “நான் ஒருவரை காதலித்து வருகிறேன், அவருடன் செல்கிறேன்; எனவே என்னை யாரும் தேட வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை, மகளின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் தேடியும் மகள் கிடைக்காததால், அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான கல்லூரி மாணவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

3 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

10 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

11 minutes ago

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் CCTV வீடியோ.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…

21 minutes ago

“அதிமுக கூடாரமே காலி?”… விஜய்யின் ‘ஆபரேஷன் பனையூர்’ – சிக்கிய 5 முக்கிய முதலைகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…

24 minutes ago

எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…

29 minutes ago