காட்டுக்குள் 2 துண்டுகளாக கிடந்த ரவுடியின் உடல்… தலையை துண்டித்து கல்லால் நசுக்கி கொலை…. கூடவே இருந்து துரோகம் செய்த நண்பர்கள்…!

Spread the love

சேலம் மாவட்டம் இடங்கணசாலை அடுத்துள்ள கேகே நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவருடைய மகன் கௌதம் (25). இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கும் இவருடைய உறவுக்கார சகோதரரான சிவமூர்த்தி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கௌதம் அவருடைய அண்ணனை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கௌதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த கௌதம் தினமும் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் தினமும் காவல் நிலையத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். அதேபோல நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற கவுதம் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த கௌதமின் பெற்றோர்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் கௌதமை தேடி வந்த நிலையில் அன்று இரவு இரும்பாலை அருகே சிட்டனூர் பகுதியை ஒட்டி உள்ள இரும்பாலைக்கு சொந்தமான நிலத்தில் கௌதம் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் தலை இல்லாமல் கிடந்துள்ளது. அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் தலையைத் தேடி வந்த நிலையில் உடல் இருந்த பகுதிக்கு சற்று தொலைவில் தலை போட்டு நசுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த கௌதமியின் நண்பர்களான தனுஷ் (22) மற்றும் மூர்த்தி (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த திருவிழாவின்போது கௌதம் குடித்துவிட்டு நண்பர்களான தனுஷ் மற்றும் மூர்த்தியை தகாத வார்த்தைகளை பேசி அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த இருவரும் கௌதமை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தற்போது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

2 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

3 மணத்தியாலங்கள் ago