மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு இரண்டு மகள்களும், வைரமுத்து என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் மாலினியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாலினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று மாலினியின் தாய் வைரமுத்து மெக்கானிக்காக வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அழைத்து விசாரித்த போது மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பதிவு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வைரமுத்துவை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த வைரமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாலினியின் சகோதரர் குகன், குகனின் நண்பர் அன்புநிதி, மாலினியின் தாய் விஜயா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் மாலினியின் தாய் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…