தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வேலியப்பன் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பாலமுருகன், முத்துராஜ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதில் முத்துராஜ் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்த நிலையில் ஆலந்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வேலியப்பனின் அண்ணன் மகனான கார்த்திக் என்பவர் பழிக்கு பழி வாங்க வேண்டும் என திட்டம் போட்டார். இதற்காக கற்படம் கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படையிடம் 10 லட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளார். இதனை அறிந்த முத்துராஜ் கிருஷ்ணகிரிக்கு சென்று உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.
சம்பவம் நடைபெற்ற அன்று கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் முத்துராஜை கண்டுபிடித்து பேருந்து நிலையத்தில் வைத்து அவரை கொலை செய்ய சுற்றி வளைத்தனர். உடனே பொதுமக்கள் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூலிப்படையினரை கைது செய்து முத்துராஜை மீட்டனர். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…