திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு கும்பல் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.
பாலாஜி நகர், சப்தகிரி நகர், சாய்முருகன் நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். ஒரு வீட்டில் 4 பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஆண் புரோக்கர்கள் கணேசன் (42), அவரது தம்பி கார்த்திக் (30), அருண்குமார் (33), வசந்தகுமார் (26) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் பலமுறை வெவ்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து இதைத் தொழிலாகச் செய்து வந்தது தெரியவந்தது. ஒரே நேரத்தில் 2-3 வீடுகளை வாடகைக்கு எடுத்து மாறி மாறி விபச்சாரம் செய்து போலீசாரிடம் தப்பித்துள்ளனர். கைதானவர்களில் இருவர் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட 4 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…