வியாசர்பாடியில் பேரதிர்ச்சி… அண்ணனுக்காகத் தட்டிக்கேட்ட தம்பிக்கு நேர்ந்த கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது….!

Spread the love

சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரான 19 வயது இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய தந்தை மற்றும் அவரது மூன்று மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை எம்.கே.பி. நகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய இருவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தனுஷ் (19) என்பவரின் அண்ணன் சிலம்பரசனை, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (என்கிற அப்புகுட்டி) குடிபோதையில் வழிமறித்துத் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தனுஷ் சம்பவ இடத்திற்குச் சென்று தட்டிக்கேட்டபோது, அப்புகுட்டி, அவரது தந்தை பொய்யாது மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் தனுஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பலத்த காயமடைந்த தனுஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே நீண்டநாட்களாக இருந்த முறையற்ற தொடர்பு சார்ந்த விவகாரமே இந்தக் கொலைக்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தனுஷ் தலையிட்டுத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் புகையத் தொடங்கியது. கடந்த தீபாவளி பண்டிகையின்போதும் சிலம்பரசனை அக்கும்பல் தாக்கிய நிலையில், மீண்டும் ஏற்பட்ட மோதலே இந்த படுகொலையில் முடிந்துள்ளது.

தலைமறைவாக இருந்த வியாசர்பாடி ஜெ.ஜெ.ஆர். நகரைச் சேர்ந்த பொய்யாது (58), அவரது மகன்கள் அப்புகுட்டி (29), சூர்யா (28) மற்றும் ரவி (26) ஆகிய நான்கு பேரையும் முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள எஞ்சிய இருவரையும் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! கதவை திறந்தது தான் தப்பா?… புகாரளித்தும் அடங்காத ஆக்ரோஷம்… பழிவாங்க துடித்த கும்பல்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…

9 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்… பெங்களூருவை உலுக்கிய திக் திக் சம்பவம்…!!

பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…

10 minutes ago

“காசு தர்றியா, சாவடிச்சிடவா?!”… அடுத்தடுத்து விழுந்த அடிகள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்… கோயிலில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…

24 minutes ago

டேய்… வண்டிய நிறுத்துடா… அலறியும் நிறுத்தாமல் போலீசை 200 மீட்டர் இழுத்துச் சென்ற… போலி நம்பர் பிளேட் கார்… நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்…!

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…

29 minutes ago

சாகசம் இப்படியா முடியும்?… 56 மீட்டர் உயர கிரேன்… வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்… மின்கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ரஷ்ய வீரர்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…

31 minutes ago

ஐயோ… கடவுளே… வீட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்… மயக்க மருந்து கொடுத்து விற்கப்பட்ட 15 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…

37 minutes ago