பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஆர்.டி. நகரைச் சேர்ந்த விஜய் நாராயணன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இந்த வழக்கில் அவரது தாய் மீனா நாராயணன் (44) மற்றும் அவரது கள்ளக்காதலனான ராகேஷ் ஜமுனி (34) உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த மீனாவிற்கு, அவரது கணவர் கடந்த ஆண்டு இறந்த பிறகு குடும்பச் சொத்துக்கள் மூலம் கணிசமான வாடகை வருமானம் கிடைத்து வந்தது. இந்தச் சூழலில், மீனா தனது காரின் ஓட்டுநரான ராகேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். பட்டதாரி இளைஞரான விஜய் நாராயணன் தனது தாயின் இந்த தவறான உறவைக் கடுமையாகக் கண்டித்து, அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் தங்களின் உறவுக்கும், குடும்பச் சொத்துக்களை அடைவதற்கும் விஜய் இடையூறாக இருப்பார் எனக் கருதிய மீனாவும், ராகேஷும் அவரைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி, கடந்த நவம்பர் 1-ஆம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா விழாவைக் காட்டுவதாகக் கூறி விஜய்யை பெங்களூருவிலிருந்து பெலகாவிக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ராகேஷின் நண்பர்கள் உதவியுடன், திட்டமிட்டபடி விஜய் நாராயணன் காரினுள்ளேயே வைத்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடல் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஒரு வடிகால் கால்வாயில் வீசப்பட்டது. நவம்பர் 3-ஆம் தேதி மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடலை மீனாவே நேரில் வந்து அடையாளம் காட்டிய நிலையில், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த கொடூர சதி அம்பலமானது. அதன் தொடர்ச்சியாக குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…