பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு ரூ 2 லட்சத்திற்கு விற்கப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 20 அன்று வீட்டில் தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமிக்கு, கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்துக் கடத்தியுள்ளார். மறுநாள் ராஜஸ்தானில் கண்விழித்த சிறுமிக்கு, தனக்கு நேர்ந்தது என்னவென்றே தெரியாத நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி, அக்டோபர் 20 அன்று தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி தனது தந்தைக்குத் தொலைபேசி மூலம் ரகசியமாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், பீகார் மாநில பாகல்பூர் காவல்துறை மற்றும் ராஜஸ்தான் பிகானேர் உள்ளூர் காவல்துறை இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார், மேலும் அவரை விலைக்கு வாங்கித் திருமணம் செய்த மன்பூல் கோதாரா (34) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியைக் கடத்தி விற்ற கிராமத்துப் பெண் பரஸ்மணி மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் பின்னணியில், இதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 முதல் 4 மைனர் சிறுமிகள் கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது ஒரு பெரிய கடத்தல் கும்பலின் பின்னணியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…
மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக திடீரென…