கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ரூபினி. இவருடைய கணவர் பால்ராஜ். இந்த தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக ரூபிணி தன்னுடைய கணவரை பிரிந்து மூன்று வயது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே ரூபிணிக்கும் சற்குணம் என்பவருக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு தனிமையில் சந்திப்பதற்காக சென்று இருந்த நிலையில் 3 வயது குழந்தையையும் ரூபிணி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருக்க குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்து பிஸ்கட்டில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்த நிலையில் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தையை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும் வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…