தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய் பல சிக்கல்களை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதன்படி வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதற்கான அனுமதியை இதுவரை பெற முடியாமல் இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 மனு அளித்தும் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஐஜி அலுவலகத்தில் அனுமதி கேட்டு ஆனந்த் மூன்றாவது முறையாக மனு அளித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியீடும் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையும் விழாவில் விஜயும் பங்கேற்றார். ஆனால் நேரில் இல்லை, கட் அவுட் வடிவில். இதில் பெரிய சுவாரசியம் என்னவென்றால் கட் அவுட் வடிவில் இருந்த விஜய் தான், புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கியது. இந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையான நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் கட்டவுட் மூலமாக அடையாள அட்டை வழங்கியது TVK மட்டுமே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…
நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…
ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…
தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…