சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். முறையான மருத்துவச் சான்றிதழ் இல்லாததால் முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இவர், தற்போது தனது தோப்பில் கோவில் கட்டி தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் சீனிபாபு தன்னிடம் மாதாந்திர மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுத்தால் பொய் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என அச்சுறுத்துவதாகவும் அந்த வீடியோவில் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவலர் ஜெயராஜ் என்பவர் தன்னிடம் பணம் வாங்கும் வீடியோ ஆதாரத்தையும் நெடுஞ்செழியன் அந்தப் பதிவில் இணைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், நாட்டு வைத்தியரிடம் பணம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் லஞ்சம் பெற்ற காவலர் ஜெயராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. மணிவண்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…