வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில், ஓய்வுபெற்றப் பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா (50), மகள் ஆகமி (23) மற்றும் 12 வயது மகன் பிரியம் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பூட்டப்பட்ட வீட்டின் உள்ளே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் குடும்பத்தினரின் தொலைபேசிகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகமடைந்த உறவினர்கள் சனிக்கிழமை இரவு நேரில் சென்று பார்த்துள்ளனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்ததால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மொட்டை மாடி, படிக்கட்டு மற்றும் கட்டிலின் அடியில் என வீட்டின் வெவ்வேறு இடங்களில் 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்ததால், நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகக் கழுத்தை நெரித்துக் இக்கொடூரக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…