தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான புதிய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது நிலைப்பாட்டை உறுதிபட வெளிப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், எதிர்த்தரப்பு கட்சிகள் தவெக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெக ஆட்சியின் சாதனைகளையும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். “சட்டமன்றத்தில் நல்ல கருத்துகளைச் சொன்னால் ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் கூறினாலும், எதிர்க்கட்சியினர் கருத்துகளைச் சொல்லாமல் ஆட்சியைக்கவிழ்க்கவே பார்க்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் செல்வாக்கே நிறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், அக்கட்சியைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே சிலர் விலகியுள்ள நிலையில், மேலும் பல எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் வர விருப்பத்துடன் இருப்பதாகவும், இடைத்தேர்தல்களில் போட்டியிடுபவர்கள் வைப்புத்தொகையை (Deposit) இழப்பது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தவெக தலைவர் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பாராட்டித் தோளைத் தட்டிக் கொடுத்ததாக செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். மக்கள் பணியில் தவெக நிர்வாகிகள் உறுதியுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை உருவாகும் அளவுக்கு மக்கள் தவெகவை ஆதரித்து வருவதாகத் தன் உரையில் தெரிவித்தார்.
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…