கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தான உரையை கேரள சட்டசபையில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நிகழ்த்தினார்.
ஆளுநர் தனது உரையின் போது, மாணவிகளின் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக ‘மாதவிடாய் கண்ணியம்’ (Menstrual Dignity) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த விடுமுறை நாட்களில் மாணவிகள் தவறவிடும் பாடங்களை ஈடு செய்யும் வகையில், வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கேரள அரசின் இந்த அதிரடி மற்றும் முற்போக்கான அறிவிப்பு பெண்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கேரளாவைப் பின்பற்றி, இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி மாணவிகளுக்கும் மாதந்தோறும் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவாக எழுந்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…