வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற இரண்டு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பூங்காவில் உள்ள மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் தாக்கியதில் குழந்தை தூக்கி வீசப்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் மின்சார முழுவதும் துண்டிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பூங்காவில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் உபகரணங்கள் உடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றது. தற்போது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…
தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…