கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடல் பாதி அளவு எரிந்திருந்தது. வேறு இடத்தில் வைத்து வாலிபரை கொலை செய்து விட்டு அருகே உள்ள பகுதிக்கு கொண்டு சென்று வாலிபரின் உடலை மர்ம நபர்கள் எரித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் பசவராஜ் என்ற சுரேஸ் (28) மாயமாகி இருப்பதாக அவருடைய மனைவி சரணம்மா புகார் அளித்திருந்த நிலையில் இது தொடர்பாக அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கொலை ஆனது பசவராஜ் என்று அடையாளம் காணப்பட்டது.
அதே நேரத்தில் பசவராஜ் கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து தான் கணவரை காணவில்லை என்று மனைவி புகார் அளித்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கள்ளக்காதலன் வீரபத்ரா (19) கொலைக்கு உடந்தையாக இருந்த அணில் (19) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியே வந்தது.
அதாவது யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் மனைவி சரணம்மா(25). இந்த தம்பதிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்த நிலையில் பசவராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கூடவே மனைவியும் வேலை செய்த நிலையில் கட்டிட மேஸ்திரி ஒருவர்தான் இந்த தம்பதியை வேலைக்கு அழைத்துச் சென்றார். அந்த மேஸ்திரியின் மகன்தான் வீரபத்ரா. தனது தந்தை கட்டிட வேலை செய்யும் இடங்களுக்கு பசவராஜ் மற்றும் சரணம்மா உள்ளிட்ட தொழிலாளர்களை வீரபத்ரா வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பசவராஜ் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் 19 வயதான வீரபத்ராவுடன் அவரும் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் மனைவியின் நடவடிக்கையில் பசவராஜிற்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் மனைவியை அவர் கண்காணிக்க தொடங்கியதில் சமீபத்தில் வீரபத்ராவுடன் அவர் உல்லாசமாக இருப்பதை பசவராஜ் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் தன்னுடைய மனைவியை கண்டித்த நிலையில் தங்கள் கள்ள காதலுக்கு இடையூறாக இருக்கும் பசவராஜை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மது குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருந்த பசவராஜ் தலையில் இருவரும் சேர்ந்து கல்லை போட்டும் கழுத்தில் கயிற்றில் கட்டி தூக்கில் தொங்கவிட்டும் கொலை செய்துள்ளனர். பிறகு தங்களுடைய நண்பர் ஒருவரை வரவழைத்து உடலை காரில் ஏற்றிச் சென்று இருவரும் சேர்ந்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தற்போது போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…