அரவக்குறிச்சி அருகே காதல் விவகாரத்தில் காதலர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வேலவம்பாடி கிராமத்தை சேர்ந்த சரண்யா (16) என்ற பள்ளி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த வசந்த் குமார் (26) என்ற இளைஞரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளன. இவர்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று காலை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று இருந்தனர்.
அப்போது மாணவியின் வீட்டுக்குள் சென்ற வசந்த் குமார் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வசந்த் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவி சரண்யாவின் கழுத்தை அறுத்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் அவர் இறந்து விட்டதாக நினைத்து அதே வீட்டில் உள்ள அறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி உயிருக்கு போராடிய நிலையில் வெளியே வந்து அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததை கேட்டு உதவி கேட்டுள்ளார்.
உடனே ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சரண்யா கழுத்தில் தையல்கள் போடப்பட்டது. சம்பவ இடத்திலேயே வசந்த் உயிர் இழந்த நிலையில் அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சரண்யாவுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்த தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…