“உன் தங்கச்சி தான் எனக்கு வேணும்”… மனைவியின் சகோதரியை 2வது மனைவியாக்க நினைத்த நபர்… இறுதியில் நடந்த பயங்கர கொடூர சம்பவம்…!

Spread the love

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் சந்தீப் கவுட் என்பவருக்கு வர்ஷா என்ற மனைவி உள்ளார். வர்ஷாவின் சகோதரர் நிஸ்சய் காஷ்யப். சகோதரி மம்தா. இதனிடையே வர்ஷாவின் சகோதரருக்கு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற முடிவாகி இருந்தது. இதற்காக பிரயாக்ராஜ் நகரில் இருந்து அவர் தனது சகோதரி மம்தா மற்றும் தாயார் சகுந்தலா தேவி ஆகியோருடன் சூரத் நகருக்கு துணி எடுக்க வந்துள்ளார். ஆனால் மம்தாவை இரண்டாவது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தீப் இருந்துள்ளார். இதனை அவரே பலமுறை நேரடியாக கூறிவந்துள்ளார். ஆனால் அதற்கு சகோதரர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு துணி எடுக்க வந்தபோது அவர்களிடம் இது தொடர்பாக பேசி சந்தீப் தகராறு செய்துள்ளார். இதில் திடீரென்று கத்தியை எடுத்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். சகுந்தலா தேவி காயமடைந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர். ஏற்கனவே சந்தீப் சகோதரரும் வர்ஷாவின் மற்றொரு சகோதரியை திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது சந்தீப் இரண்டாவது சகோதரியை திருமணம் செய்ய முயற்சித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… MLA-க்களே செய்த துரோகம்… முதல்வர் விஜய்யின் “Clean Operation” ஆரம்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…

3 minutes ago

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

12 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

14 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

33 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

39 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

40 minutes ago