சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே குடித்துவிட்டு நடனம் ஆடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும், அருகிலுள்ள கடை வாசலில் மீண்டும் மோதிக் கொண்டனர். பவுன்சர்கள் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் மூன்று இருசக்கர வாகனங்களிலும், மற்றொரு தரப்பினர் சொகுசு காரிலும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காரின் மீது கற்களை வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள், வாகனத்தை வேகமாக இயக்கி அவர்களை இடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த வழியே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 18 வயதுடைய யான்சி என்ற பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த 17 வயது தோழி பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த யான்சி விழுப்புரம் மாவட்ட இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் என்பதும், திருவள்ளூரில் உள்ள தோழியைப் பார்க்க வந்தவர் கடந்த 10 நாட்களாகப் பக்கத்து ஊரைச் சேர்ந்த பவுசியா தீபிகா என்பவரது வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. கடந்த 28ஆம் தேதி சினிமாவுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை தாமதமாக வந்ததால் பவுசியாவின் தாய் திட்டியுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்தத் துயர விபத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுமன் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர்,…
ஹோமாகம, கட்டுவான பகுதியில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து…
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர…
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சிக்கல்களுக்குப் பிறகு திரைக்கு வந்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லரில்…
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகளையும், காணாமல் போன 50,000 மனிதர்களின் பின்னால் இருக்கும் பெரும் துயரத்தையும் நீங்கள் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும்…