ஒரே ஒரு போன் கால்… பள்ளி முதல்வரை 27 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 10ம் வகுப்பு மாணவன்….. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

Spread the love

தெலங்கானாவில் பணத்திற்காகவும், ஆத்திரத்தினாலும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது பள்ளி முதல்வரையே கொடூரமாகக் குத்திக்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றி வந்த ரூபா ரெட்டி என்பவர், கடந்த 11-ஆம் தேதி தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, ரூபா ரெட்டி கடைசியாகத் தனது அத்தையிடம் தொலைபேசியில் பேசியபோது யாரையோ ‘பாபு’ என்று அழைத்த விபரம் தெரியவந்தது. இதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரே இக்குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தொடர் கண்காணிப்பில், அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் திடீரென பார்கள் மற்றும் பப்களுக்குச் சென்று அதிகளவில் பணத்தை செலவிட்டு வந்தது தெரியவந்தது. இதில் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விடுதியில் தங்கிப் படித்தபோது செல்போன் மற்றும் பணத்தை முறையற்ற வழியில் வைத்திருந்த காரணத்திற்காக, முதல்வர் ரூபா ரெட்டி தங்களை விடுதியிலிருந்து நீக்கியதே இந்த கொடூர சம்பவத்திற்கு முக்கியக் காரணம் என அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்திலும், ஆடம்பரச் செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டதாலும், ரூபா ரெட்டி வீட்டில் தனியாக இருந்த நேரத்தைப் பார்த்து அவர்கள் இக்கொலை திட்டத்தைத் தீட்டியுள்ளனர். ஒரு மாணவன் வீட்டிற்கு வெளியே காவல் காக்க, மற்றொரு மாணவன் சுவரேறிக் குதித்து உள்ளே புகுந்து ரூபா ரெட்டியைக் கொடூரமாகக் குத்திக்கொலை செய்துவிட்டுப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். மாணவர்களின் இந்தத் கொடூரச் செயல் கல்வி உலகையும், பொதுமக்களையும் பெரும் உறைச்சலில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

7 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

7 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago