மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே நீண்டகாலமாக நதிநீர்ச் சிக்கல் நிலவி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், உரிய காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தாமதம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில் கர்நாடக மாநிலத் தலைவர்கள் அரசியல் செய்வதாகவும், மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது என்றும் தமிழக தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைக்காகத் தென் மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சென்னை வந்திருந்தார். அதேபோலத் தமிழக முதல்வர் விஜயும் இம்மாநாட்டில் பங்கேற்றார். மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைத் திட்டங்கள், நதிநீர் இணைப்பு மற்றும் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் உரையாற்றிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேகதாது திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். மேகதாதுவில் அணை கட்டி நீரைச் சேமித்து வைப்பதன் மூலம் கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடு மாநிலமும் பலனடையும் என்றும், அணை இல்லாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நீரைச் சேமிப்பதன் மூலம் வறட்சி போன்ற நெருக்கடியான காலங்களில் இரு மாநிலங்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…