இப்படியும் கூட சேவ் செய்ய முடியுமா? ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இந்திய தாத்தா… வீடியோ பாருங்க.. நீங்களே சொல்லுவீங்க..!

வாழ்க்கையில் பணத்தை சேவ் செய்கிறோமோ இல்லையோ ஆணாகப் பிறந்தால் தாடியை சேவ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். பொதுவாக பிளேடால் தான் தாடியை சேவ் செய்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே ஒரு தாத்தா வெறுமனே குச்சியை மட்டுமே வைத்து இந்த அதிசயத்தை செய்திருக்கிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரலும் ஆகிவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக ரேசர் மிஷினை வைத்து சேவ் செய்வதற்குப் பதிலாக அந்தப் பெரியவர், அவரே குச்சி, நூல் ஆகியவற்றைக் கொண்டு ரேசர் போன்ற ஒரு கருவியை உருவாக்கி இருக்கிறார். இதில் இரண்டு சிறிய குச்சிகள் ஒருபக்கம் மட்டும் சேர்ந்தபடி ‘வி’ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் குச்சிகள் இணைக்கப்படாத பக்கத்தில் நூல்களைக் கொண்டு ரேசரை அவரே தயாரித்துள்ளார். இதில் பிளேடுகளுக்குப் பதிலாக பல அடுக்குகளாக நூல்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த நூல் ரேசரில் தாத்தா, மிக அழகாக சேவ் செய்கிறார்.

 

அதேநேரத்தில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? இந்த தாத்தா யார்? என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.