Categories: சினிமா

ரஹ்மான் வந்துட்டார்… உங்கப்பா அவ்வளவுதான் என்று சொன்னார்கள்… எனக்கு ஷாக்காக இருந்தது…  யுவன் பகிர்ந்த எமோஷனல் தருணம்!

Spread the love

சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

Rahman and ilaiyaraaja

அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அவருக்கு சரியான போட்டியாக அமைந்தது. வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மான் தனக்கான இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மான் வருகை தன்னை எப்படி மாற்றியது என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “ரஹ்மான் வந்தப்போ, சிலர் என்கிட்ட உங்கப்பா அவ்வளவுதான்னு, ரஹ்மான்னு ஒருத்தர் வந்துட்டார்னு சொன்னாங்க. எனக்கு அது ஷாக்காக இருந்தது. நான் ரஹ்மான் பாட்டு கேசட் வாங்கிக் கேட்டேன். எல்லாமே நல்லா இருந்தது.

அப்போ எங்க அப்பா உருவாக்கின லெகஸி என்ன ஆகும்னு யோசிச்சேன். என் அண்ணன் இசையமைப்பாளர் ஆனாலும் அவர் கேரியர் பெரிசாக வளரவில்லை. அப்பாவோட பெருமையைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணேன். அதுக்காகதான் நான் இசையமைப்பாளர் ஆகணும்னு முடிவு பண்ணேன். அப்படிதான் நான் சினிமாவுக்குள் வந்தேன்.  இதை ரஹ்மான் கிட்டயும் சொல்லி இருக்கேன். அதுக்கு முன்னாடி நான் பைலட் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

கணவன் தூங்கும் போது கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்… 4-வது கல்யாணத்திற்காக போட்ட பயங்கர பிளான்…!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…

51 seconds ago

ரூ35 கோடி Vs ரூ50 கோடி..! தவெக, திமுக MLA-க்களுக்கு வலைவீச்சு…? தமிழக அரசியலை அதிரவைக்கும் பவர் பிளே…!

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…

6 minutes ago

இளைஞர்களே… இனி வேலை தேடி அலைய வேண்டாம்… மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

16 minutes ago

ஷாக்.. இனிமே டெலிகிராமில் படம் டவுன்லோடு பண்ண முடியாது…! ஆக்‌ஷனில் இறங்கிய மத்திய அரசு… சினிமா ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி…!!

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…

37 minutes ago

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

44 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

51 minutes ago