ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் என்ற 20 வயது இளைஞருக்கும், ஊர்மிளா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஊர்மிளாவிற்குத் தனது அக்காவின் கணவரான சுபாஷ் பஸ்வானுடன் தகாத உறவு இருந்துள்ளது. திருமணம் நடந்துவிட்டால் இந்த உறவைத் தொடர முடியாது என நினைத்த ஊர்மிளா, கள்ளக்காதலனுடன் இணைந்து வருங்கால கணவரைக் கொல்லத் திட்டம் தீட்டினார். அதன்படி, தனிமையில் சந்திக்கலாம் எனக் கூறி நீரஜைப் பீகார் எல்லையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு ஆசையோடு சென்ற நீரஜை, ஏற்கனவே காத்திருந்த ஊர்மிளாவும் அவரது அக்கா கணவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகப் படுகொலை செய்தனர். மகன் காணாமல் போனது குறித்துக் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், செல்போன் டவர் சிக்னல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது கொலையாளிகள் மாட்டிப் கொண்டனர். தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கள்ளக்காதலர்கள் இருவரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…