சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில், தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிச் சென்றபோது திடீரென தீப்பற்றியது. ஓட்டுநர் நிலைமையை உணர்ந்து உடனடியாக மாணவர்களைக் கீழே இறக்கியதால், அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மாணவர்கள் இறங்கிய அடுத்த நொடியே வேன் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அருகிலிருந்த கேஸ் பங்க் பணியாளர்களும் பொதுமக்களும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தீயை அணைத்ததால், அங்கு நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, மாணவர்கள் வேறு வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சரியாக ஐந்து நாட்களுக்கு முன்பு, வேளச்சேரி-கைவேலி பேருந்து நிறுத்தம் அருகே பராமரிப்புப் பணிக்காக எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு தனியார் பள்ளி வேனின் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வெளியேறியது. ஓட்டுநர் சாலையோரம் வேனை நிறுத்தி இறங்கிய சில நிமிடங்களில், தீ மளமளவெனப் பரவி வேன் முழுமையாக எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் வரை அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது வேனில் மாணவர்கள் யாரும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பள்ளி வாகனங்கள் இதுபோன்ற தீ விபத்துகளில் அடிக்கடி சிக்குவது பெற்றோர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பராமரிப்புக் குறைபாடுகளே இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. எனவே, அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்கும் முன் அரசு அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் முறையாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…