“புத்தகப் பைக்கு இனி குட்பை…! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு… அமைச்சர் தந்த செம சர்ப்ரைஸ்…!”

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை மையமாகக் கொண்டு கல்வியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் பேசிய அவர், கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடங்கள் அனைத்தும் கதைகளின் வழியே கற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைப்பதன் மூலம் அவர்களின் மனச்சுமையும் குறைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். பாடப் புத்தகங்களில் வண்ணப் படங்கள் அதிகமாக்கப்பட்டு, அதில் உள்ள கியூஆர் கோட் மூலம் பாடங்களைக் காணொளியாகப் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றும், ஏஐ தொழில்நுட்பம் வேலையைப் பறிக்காது என்பதால் அதைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோரையும் சமூகத்தையும் மதிக்கும் வகையிலான ஆரோக்கியமான கல்வியை வழங்குவதே இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார். தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் எனக் கூறிய அவர், கல்வித் துறையில் ஊழலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

Swetha

Recent Posts

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

6 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

14 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

2 மணத்தியாலங்கள் ago