ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீ கங்காநகர் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவு 1 மணியளவில் ஏசி 2-டயர் பெட்டியில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு, மது அருந்திய கும்பலால் அச்சுறுத்தல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் இருந்த மூன்று நபர்கள் மது அருந்திக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசி வந்த நிலையில், “இங்குச் குழந்தைகள் இருக்கிறார்கள், இவ்வாறு செய்யாதீர்கள்” என்று அந்தப் பெண் தடுத்துள்ளார். இருப்பினும், அந்த நபர்கள் தொடர்ந்து மது அருந்திவிட்டு, புகார் அளிப்பவர்களின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து TTE மூலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸ் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் பொலிஸார் வருவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் வராததால், “பெண்கள் பாதுகாப்பில் ரயில்வே எவ்வளவு தீவிரமாக உள்ளது?” என்று கேள்வி எழுப்பி அந்தப் பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…