“கணவன் வீட்டில் இருக்கும்போதே வந்த கள்ளக்காதலன்…” கத்தியால் சரமாரியாக குத்தி…! ரத்த வெள்ளத்தில் துடித்த வாலிபர்… பெண்ணின் வெறிச்செயல்… பகீர்…!!

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் கண்ணனும் அவரது மனைவி சிந்துஜாவும் பாண்டித்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிந்துஜா சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் பாண்டித்துரையின் முதுகு மற்றும் வயிற்றில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட வெளியேறிய பாண்டித்துரை, சாலையில் தடுமாறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினரின் விசாரணையில், ராஜேஷ் கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சமயத்தில், பாண்டித்துரைக்கும் சிந்துஜாவிற்கும் இடையே திருமண மீறிய உறவு இருந்ததாக பாண்டித்துரையின் மனைவி நித்யா புகாரளித்துள்ளார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த கணவன் வீட்டில் இருக்கும்போதே பாண்டித்துரை அங்கு சென்று தகராறில் ஈடுபட்டதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருமங்கலம் நகர் போலீசார், கணவன் ராஜேஷ் கண்ணன் மற்றும் மனைவி சிந்துஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

17 minutes ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

34 minutes ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

38 minutes ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

1 மணத்தியாலம் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… கை நழுவுது… ஓடும் ரயிலில் தவறி விழுந்த… பயணியை சில நொடிகளில் காப்பாற்றிய… ஆர்.பி.எஃப் வீரரின் சாகசம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…

2 மணத்தியாலங்கள் ago