நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘சர்தார் 2’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய ரவி மோகன், “என் மகன், என் அப்பா, அம்மா மாதிரி என் கார்த்தி” என்று தனது மகன்களைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ரவி மோகனின் இந்தப் பேச்சுக்குத் தற்போது அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “தங்கள் குழந்தைகளை உண்மையில் வளர்த்துக்கொண்டிருப்பது அவர்களது அம்மாவாக இருக்கும்போது; ‘நல்ல அப்பா’ என்று பெருமை பேசிக்கொள்வதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தி தனது பதிவில் ரவி மோகனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், சர்தார் 2 விழாவில் ரவி பேசிய உடனேயே இந்தச் செய்தியைப் பதிவிட்டிருப்பதால், அவர் தனது முன்னாள் கணவரைக் குறிவைத்துதான் சாடியுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்த்தியின் இந்த அதிரடி போஸ்ட் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…