பீகார் மாநிலம் ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள நெல் வயலில் சுமார் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று ஊர்ந்து திரிவதைக் கண்ட கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்குள், மக்களின் பாதுகாப்பைக் கருதி அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த முதலையை லாவகமாகப் பிடித்தனர்.
முதலையைப் பிடித்ததும் அங்கிருந்த ஒரு தைரியமான வாலிபர், அதை எவ்வித பயமும் இன்றி தன் தோளில் சுமந்து கொண்டு நேராக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார். இந்த ஆச்சரியமான காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானதுடன், அந்த வாலிபரின் துணிச்சலை நெட்டிசன்கள் பலரும் “பீகார் காரர்களை சாதாரணமாக இடைபோட முடியாது” எனப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த கிராமவாசிகளின் இந்த உடனடி நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். அதன்பின்னர், கிராம மக்களிடமிருந்து முதலையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், அதை கிராமத்திற்கு அப்பால் உள்ள பாதுகாப்பான ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…