சின்னத்திரை மற்றும் சினிமாவில் பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அருவி” சீரியலில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாக நடித்து வருகிறார். இது பிரபல கன்னட சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஜோவிதாவுக்கு ஜோடியாக கார்த்திக் வாசுவும் அவருக்கு அம்மாவாக நடிகை அம்பிகாவும் நடித்து வருகின்றனர்.
இது சீரியலில் ஒப்பனை கலைஞராக இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருவி சீரியலின் படபிடிப்பு சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கும் தர்மராஜா கோவிலில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒப்பனை பெண் கலைஞரான ராம பிரபாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இரவில் இருந்தே அவருக்கு உடல் நலம் சரியில்லை. மறுநாள் காலை சீரியல் படப்பிடிப்புக்கு சென்ற ராம பிரபாவுக்கு மூச்சு திணறல் அதிகரித்தது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ராம பிரபாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டை பூர்வீகமாக கொண்ட ராம பிரபா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்ததால் ராமபிரபா மகனை சித்தி வீட்டில் விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு ராம பிரபாவின் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராம பிரபாவின் இறப்பு தொடர்பாக ஜோவிதா, அம்பிகா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…