போடு ரகிட ரகிட… இனி Gmail ஐடியை மாற்றலாம்… ஒரே ஒரு கண்டிஷன்… Google வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

நாம் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக உருவாக்கிய ஜிமெயில் ஐடியை வேலை மற்றும் தொழில் முறை தேவைகளுக்காக மாற்ற முடியாமல் தவிப்பவர்களுக்கு google ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது பயனர்கள் தங்களுடைய பழைய ஜிமெயில் user name மாற்றிக் கொள்ளும் புதிய வசதியை google சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலமாக பயனர்கள் @gmail.com என முடிவடையும் தங்களின் தற்போதைய மெயில் முகவரியை மாற்றி விட்டு அதே கணக்கில் புதிய பெயரில் முகவரியை தேர்வு செய்து கொள்ள முடியும்.

இந்த மாற்றத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், மெயில் ஐடியை மாற்றினாலும் உங்கள் கூகுள் கணக்கில் உள்ள கூகுள் டிரைவ் (Drive), போட்டோஸ் (Photos), யூடியூப் (YouTube) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) போன்ற சேவைகளில் உள்ள எந்தத் தரவுகளும் (Data) அழியாது. நீங்கள் வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைத்தும் அப்படியே தொடரும். உங்களின் பழைய மெயில் முகவரி, பாதுகாப்புத் தேவைக்காக ‘ரிகவரி மெயில்’ (Recovery Email) ஆகத் தானாகவே சேமிக்கப்படும்.

இந்த வசதியில் சில நிபதனைகளும் உள்ளது. ஒருமுறை மெயில் ஐடியை மாற்றிய பிறகு மீண்டும் மாற்ற விரும்பினால் 12 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல google கணக்கில் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே யூசர் நேமை மாற்ற அனுமதிக்கப்படும். நீங்கள் கைவிட்ட பழைய ஜிமெயில் ஐடியை பயன்படுத்தி வேறு யாரும் புதிய கணக்கை தொடங்க முடியாது என்பதால் உங்களுடைய பழைய ஐடியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

39 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

48 minutes ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

1 மணத்தியாலம் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

1 மணத்தியாலம் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago