ஆமை விட்ட சாபத்தால் குள்ளமாக மாறிப்போன மனிதர்கள்! விஞ்ஞானிகளையே திணறவைத்த உண்மை சம்பவம்?

By Arun

Published on:

சீனாவின் யாங்க்ஸி என்ற சிறிய கிராமத்தில் வாழும் மக்களில் 40% பேர் குள்ளமாக இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் பலரும் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்ச்சி இல்லாமல் குள்ள மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். இது என்ன வினோதமாக இருக்கிறதே என்று கேள்விப்பட்ட விஞ்ஞானிகள் பலரும் இந்த கிராமத்திற்கு படை எடுத்தனர். ஆனால் அவர்களால் எந்த அறிவியல்பூர்வமான உண்மைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஓர் மர்மமான வியாதி அந்த கிராமத்தில் பரவியது. அதில் இருந்து பிறக்கும் குழந்தைகள் பலரும் வளர்ச்சி இல்லாமல் ஒரு கட்டத்தில் குள்ள மனிதர்களாக ஆகிவிட்டார்களாம். இவ்வாறு ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் அப்படி என்ன வியாதி என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.

   

ஆனால் கிராமத்தில் வேறு ஒரு கதை நம்பப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர் ஒரு நாள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது குறுக்கே ஒரு கருப்பு ஆமை மெதுவாக சென்றுகொண்டிருந்ததாம். இதற்கு முன் அப்படி ஒரு ஆமையை அவர் பார்த்ததே இல்லை என்பதால் அதனை தூக்கிச் சென்று வறுத்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதன் படி நன்றாக வறுத்து சாப்பிட்டிருக்கிறார். அவருடன் சிலரும் அந்த ஆமையை சாப்பிட்டிருக்கின்றனர். அடுத்த நாளே அந்த ஆமையை சாப்பிட்ட வாங்கிற்கும் அவருடைய சகாக்களுக்கும் உடல் உபாதை ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்த சமயத்தில் அந்த கிராமத்தில் வினோத நோய் ஒன்று தாக்கியிருக்கிறது.

அதில் குழந்தைகள் உட்பட பலரும் இறந்திருக்கிறார்கள். அதில் இருந்து அந்த கிராமத்தில் பிறக்கும் பலரும் குள்ள மனிதர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். அந்த ஆமை விட்ட சாபம்தான் இதெற்கெல்லாம் காரணம் என்று நம்பப்படுகிறது. 2015-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யாங்ஸி கிராமத்தின் மக்கள் தொகை 80 என்று கூறப்படுகிறது. அதில் குள்ள மனிதர்கள் மட்டும் 36 பேர் இருந்திருக்கிறார்கள்.

சமீப காலமாக தங்களுடைய சந்ததிகளாவது உயரமாக வளரட்டும் என்று முடிவெடுத்து பலரும் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி வெவ்வேறு ஊர்களுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்களாம். அந்த கிராமமே இன்னும் சில ஆண்டுகளில் ஆளரவமற்ற கிராமமாக மாறிவிட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

author avatar