ரெண்டு துண்டாகப்போகும் ஆப்பிரிக்கா! கேரளாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து? உலகையே அச்சுறுத்தும் மாபெரும் பிளவு!!

By Arun

Published on:

கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாகவே ஆப்பிரிக்க கண்டத்தின் பிளவு குறித்த செய்திகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் பிளவு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த பிளவு தற்போது 56 கிலோ மீட்டர் தூரம் வரை நிகழ்ந்துள்ளது.

இது இன்னும் பிளவுப்பட்டு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரியும்போது அதன் கிழக்குப் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை நோக்கி வந்து கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் மோதும் எனவும் அதன் பின் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருங்காலத்தில் குளிர் பிரதேசங்களாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

   

ஜெர்மனைச் சேர்ந்த பிரபல புவியியலாளரான வெக்னரின் கோட்பாட்டுபடி சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது பூமியில் உள்ள கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது எனவும் அதன் பின் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டு ஒவ்வொரு கண்டங்களாக பிரிந்து தற்போதுள்ள கண்டங்களாக மாறியுள்ளதாகவும் நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 6 முறை இந்த இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிளவை புரிந்துகொள்ளவேண்டும் என்றால் நாம் டெக்டோனிக் பிளேட்டுகள் குறித்து புரிந்துகொள்ளவேண்டும். நமது பூமியின் நிலப்பரப்பு டெக்டோனிக் தகடுகளால் ஆனது. இந்த டெக்டோனிக் தகடுகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கும். நகர்ந்துகொண்டே இருக்கும் டெக்டோனிக் தகடுகள் ஒன்றன் மீது ஒன்று மோதும்போது மலைகள் உருவாகின்றன. இந்த டெக்டோனிக் தகடுகள் பிரியும்போது அந்த இடத்தை கடல் நிரப்பிக்கொள்கிறது.

இதன்படி ஆப்பிரிக்கா கண்டம் மூன்று டெக்டோனிக் தகடுகளால் ஆனதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு, அரேபிய டெக்டோனிக் தகடு, சோமாலி டெக்டோனிக் தகடு. இதில் எத்தியோபியா, கென்யா, சோமாலியா போன்ற பல நாடுகளை உள்ளடக்கிய கிழக்குப் ஆப்பிரிக்க பகுதிகள் சோமாலி டெக்டோனிக் தகடுகளால் உருவானது. இந்த சோமாலி டெக்டோனிக் தகடுதான் தற்போது பிளவுபட தொடங்கியுள்ளது. இந்த தகடு தென்மேற்கு திசையில் நகர்வதாக கூறுகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த பிளவு எத்தியோப்பிய பாலைவனப்பகுதிகளில் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு கென்யாவின் நைரோபி-நரோக் நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு திடீரென பிளவு ஏற்பட்டது. இந்த சம்பவங்களை தொடந்து சில நாட்களுக்கு முன் இந்த கிழக்கு ஆப்பிரிக்கா பகுதி பிற்காலத்தில் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் என கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

எனினும் ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமாக பிளவுபட கிட்டத்தட்ட 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பிளவு சாதகமா பாதகமா என்பதை 10 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னே வரும் சந்திதியினரால்தான் அறிந்துகொள்ள முடியும். நாம் அதுவரை உயிரோடு இருக்கப்போவதில்லை என்பதுதான் இப்போதைக்கான ஆறுதல்.

 

author avatar