Connect with us

விமானத்தில் இருந்து நடுக்கடலில் விழுந்தும் உயிர் தப்பிய அதிசய சிறுமி! கேட்கவே பதைபதைப்பா இருக்குதே!

Web Stories

விமானத்தில் இருந்து நடுக்கடலில் விழுந்தும் உயிர் தப்பிய அதிசய சிறுமி! கேட்கவே பதைபதைப்பா இருக்குதே!

கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மிக மிக மிக அரிது. இந்த அரிதினும் அரிதில் ஒரு சிறுமிதான் பஹியா.

பிரான்ஸில் தனது தாயுடன் வசித்து வந்த 13 வயது சிறுமி பஹியா, 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது தாயாருடன் கொமோரோஸ் என்ற தேசத்துக்கு விமானத்தில் பயணித்தாள். பிரான்ஸில் இருந்து ஏமன் நாட்டிற்கு சென்று அங்கிருந்து கொமோரோஸுக்கு போக வேண்டியதாக இருந்தது. அதன் படி ஏமனில் இறங்கி அங்கிருந்து ஏமனியா ஃப்ளைட் 626 என்ற விமானத்தில் கொமோரோஸுக்கு பயணப்பட்டார்கள்.

   

அந்த விமானத்தில் பஹியாவோடு சேர்த்து 142 பயணிகள். 11 விமான பணியாளர்களையும் சேர்த்து 153 பேர். நள்ளிரவில் கொமோரோஸை நெருங்கிய கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பஹியா உள்ளிட்ட பலரும் தூக்கி எறியப்பட்டு நடுக்கடலுக்குள் விழுந்தனர்.

 

அவளுக்கு கொஞ்சம் நீச்சல் தெரிந்திருந்தாலும் உடைந்துப்போன விமான பாகம் ஒன்றை கையில் பற்றியபடி நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்தாள். அவள் உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உடல் முழுவதும் வலி பிண்ணி எடுத்தது. நடுக்கடலில் அவள் அலறியதோடு பல அலறல் குரல்களும் கேட்டன.

ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த அலறல் குரல்கள் அடங்கியது. இவள் மட்டும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துகொண்டிருந்தாள். கிட்டத்தட்ட 9 மணி நேரமாக அப்படியே மிதந்துகொண்டிருந்த பஹியாவின் கண்களில் ஒரு நம்பிக்கை தென்பட்டது.

இவ்வாறு ஒரு விமானம் நடுக்கடலில் விபத்திற்குள்ளான செய்தியை அறிந்த கொமோரோஸ் அரசு, உயிருடன் யாராவது இருந்தார்கள் என்றால் அவர்களை மீட்பதற்கு ஒரு படகை அனுப்பியிருந்தது. அந்த படகில் இருந்தவர்கள் விமான விபத்தில் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தனர்.

ஆனால் ஒரு சிறுமி உயிருடன் மிதந்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் ஆச்சரியத்திற்குள்ளானார்கள். உடனடியாக படகில் இருந்து ஒருவர் நீருக்குள் குதித்து பஹியாவை படகுக்குள் பத்திரமாக ஏற்றினார். அந்த கோர விபத்தில் பஹியாவின் தாயாரோடு சேர்த்து 152 பேரும் இறந்துபோனார்கள். அந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி அந்த சிறுமிதான். நடுக்கடலில் விமானம் விழுந்து இதுவரை யாரும் உயிர்பிழைத்தது இல்லை, பஹியாவைத் தவிர. ஆதலால் பஹியாவை “இந்த நூற்றாண்டின் அதிசய சிறுமி” என்கின்றனர்.

Continue Reading
To Top