Categories: சினிமா

என்ன மனுஷன்யா இப்படி நடிச்சிருக்காரு…. தனுஷிற்கு தேசிய விருது உறுதி… குபேரா படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்கள்…!!

Spread the love

நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான படம் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த படம் வெளியானாலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் காலை 6.30 மணிக்கு எல்லாம் வெளியாகிவிட்டது. வெளிநாடுகளில் பிரீமியம் ஷோ என்று சொல்லப்படும் முதல் கட்சியானது முடிவடைந்துவிட்டது. இதனால் படம் பார்த்தவர்கள் படம் எப்படி இருக்கிறது என்பதை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குபேரா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.

படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது என்றும், சேகர் கம்முலா எழுதிய இந்த கதைக்கு எப்படி கிளைமாக்ஸ் அமையும் என்பது பதட்டமாக இருந்தது. ஏனென்றால் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பி விடும் ரிஸ்க் இருந்தது. ஆனால் அவர் கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படம் உங்களோடு இதயத்தை இடித்து நீடித்து நிற்கும் . தனுஷின் நடிப்பு நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும்.   2021 ஆம் வருடம் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்தது ஒருவர் தேசிய விருது சரியாக கொடுக்கப்பட்டால் அது தனுஷுக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். என்ன மாதிரியான ஒரு நடிகர் என்று பதிவிட்டுள்ளார்.  லவ் ஸ்டோரி படத்திற்கு பிறகு சேகர் கம்முலா கொடுத்திருக்கும் சிறப்பான படம் தான் இது. ஆழமான கதையை வைத்து மனதை பாதிக்கும் சினிமாவை கொடுத்துள்ளார். கண்டிப்பாக இந்த படம் பிளாக் பாஸ்டர் அடிக்கும் என்று ஒருவரும் ,என்ன எக்ஸ்பிரஷன் ஒவ்வொரு காட்சியும் தனுஷ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனுஷ் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். அதேநேரம் தியேட்டரில் படம் பார்ப்பவர்களுடைய விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் படத்தின் வெற்றி அமையும்.

Soundarya

Recent Posts

ஓம் சக்தி, பரா சக்தி, திமுக ஒரு தீய சக்தி… தஞ்சையில் திமுகவை அலறவிட்ட விஜய்..!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், "தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக" என அதிரடியாக…

3 minutes ago

“எனது மகளை விட எனக்கு விஜய்யைத்தான் அதிகம் பிடிக்கும்” பெண் தொண்டரின் பேச்சால் அதிரும் அரசியல் களம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், தலைவர் விஜய்யைக்…

7 minutes ago

BREAKING: விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் மண்டை உடைந்தது…!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தவெக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தலைவர் விஜயைப் பார்ப்பதற்காக, திருச்சியில் இருந்து…

17 minutes ago

“மருந்துக்கு பதில் மது!” – உயிரைக் குடித்த பிடிவாதம்..காதலன் குத்தியும் திருந்தாத பெண்.. கர்நாடகாவை உலுக்கிய கொலை சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுராவில், இரண்டு குழந்தைகளின் தாயான தேஜஸ்வினி என்ற பெண் தனது காதலனாலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட…

20 minutes ago

“சங்கீதா டூ கூட்டணி” – அடுக்கடுக்கான சர்ச்சைகளில் தவெக! மௌனம் கலைப்பாரா தளபதி? தமிழக அரசியலை நடுங்க வைக்கும் தஞ்சை முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள சூழலில், அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த…

25 minutes ago

தவெக கூட்டத்திற்கு விஜய் – சங்கீதா புகைப்படத்துடன் வந்த தொண்டர்… திடீர் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4, 2026) தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்…

25 minutes ago