நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான படம் குபேரா. இந்த படத்தில் நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த படம் வெளியானாலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் காலை 6.30 மணிக்கு எல்லாம் வெளியாகிவிட்டது. வெளிநாடுகளில் பிரீமியம் ஷோ என்று சொல்லப்படும் முதல் கட்சியானது முடிவடைந்துவிட்டது. இதனால் படம் பார்த்தவர்கள் படம் எப்படி இருக்கிறது என்பதை சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது குபேரா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் தான் வருகிறது. குறிப்பாக தனுஷின் நடிப்பை அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.
In #Kuberaa , @dhanushkraja doesn’t just play a beggar. He becomes one.
This role…mannn…It’s raw. It’s filthy. It smells of desperation and decay. A huge part of the film unfolds in the underbelly of the city dumpyards, slums, places most people wouldn’t even look at, let…
— Thyview (@Thyview) June 20, 2025
படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது என்றும், சேகர் கம்முலா எழுதிய இந்த கதைக்கு எப்படி கிளைமாக்ஸ் அமையும் என்பது பதட்டமாக இருந்தது. ஏனென்றால் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பி விடும் ரிஸ்க் இருந்தது. ஆனால் அவர் கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். இந்த படம் உங்களோடு இதயத்தை இடித்து நீடித்து நிற்கும் . தனுஷின் நடிப்பு நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும். 2021 ஆம் வருடம் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

#Kuberaa is going to be special for many reasons! @dhanushkraja sir’s masterclass in acting & art of picking challenging characters that only he can pull off so effortlessly. @iamnagarjuna sir, It’s going to be a treat to watch you in a killer character under Sekhar garu’s…
— Sai Pallavi (@Sai_Pallavi92) June 20, 2025
அடுத்தது ஒருவர் தேசிய விருது சரியாக கொடுக்கப்பட்டால் அது தனுஷுக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். என்ன மாதிரியான ஒரு நடிகர் என்று பதிவிட்டுள்ளார். லவ் ஸ்டோரி படத்திற்கு பிறகு சேகர் கம்முலா கொடுத்திருக்கும் சிறப்பான படம் தான் இது. ஆழமான கதையை வைத்து மனதை பாதிக்கும் சினிமாவை கொடுத்துள்ளார். கண்டிப்பாக இந்த படம் பிளாக் பாஸ்டர் அடிக்கும் என்று ஒருவரும் ,என்ன எக்ஸ்பிரஷன் ஒவ்வொரு காட்சியும் தனுஷ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனுஷ் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். அதேநேரம் தியேட்டரில் படம் பார்ப்பவர்களுடைய விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் படத்தின் வெற்றி அமையும்.
#Kuberaa – What an intro scene of #Dhanush🫡
No other STAR Actors will accept for this💯
The Performer Dhanush has completely surrendered himself👏🛐pic.twitter.com/Vv5Pmdjswi— AmuthaBharathi (@CinemaWithAB) June 20, 2025
