நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாகக் கூறி சங்கீதா இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்துள்ள இந்தச் செய்தி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைச் சுமுகமாக முடிக்க விஜய் தரப்பிலிருந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும், தனது மனைவி சங்கீதா, மகன் மற்றும் மகளுக்கு ஜீவனாம்சமாக பெரும் தொகையை(ரூ.25 கோடி) வழங்க விஜய் முன்வந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன.
விஜய்யின் சொத்து மதிப்பு கணிசமாக உள்ள நிலையில், அதில் ஒரு பகுதியை ஜீவனாம்சமாக வழங்க அவர் முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20, 2026 அன்று விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…