காரைக்குடிக்கு வந்தா உல்லாசமா இருக்கலாம்…. ஆசையோடு போன பைனான்ஸ் அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் மிரட்டிய பெண்.. பயங்கர அதிர்ச்சி…!

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டி பகுதியைச் சேர்ந்த வடிவேல் (வயது 40) என்ற பைனான்ஸ் அதிபரை, ஆசை வார்த்தை கூறி வரவழைத்து நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் பெண் உட்பட இருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் வடிவேலின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர், தன்னை ‘கவிதா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, கடந்த ஜூன் 9-ஆம் தேதி வடிவேலிடமிருந்து கூகுள் பே (GPay) மூலமாக ரூ.4,500 பெற்றுள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து அவருடன் போனில் பேசி வந்த கவிதா, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறி வடிவேலை வலை வீசி இழுத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பிய வடிவேல், கடந்த ஜூன் 24-ஆம் தேதி காரைக்குடிக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைத் திட்டமிட்டு ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு கவிதா அழைத்துச் சென்றுள்ளார். ஆசையோடு உள்ளே சென்ற வடிவேலுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிற்குள் கவிதாவின் ஆண் நண்பர்கள் சிலர் ஏற்கனவே திட்டமிட்டு மறைந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே கும்பலாகச் சேர்ந்து செயல்படுவது தெரியவந்ததால் வடிவேல் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அவர் நிலைகுலைந்து நின்ற கணத்தில், அந்த கும்பல் வடிவேலை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஆடையின்றி நிர்வாணமாக்கியது. மேலும் அவரை கொடூரமாகத் தாக்கி, “உயிரோடு போக வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் தர வேண்டும்” என்று மிரட்டியுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்று வடிவேல் கெஞ்சியதை அடுத்து, அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், இந்த கூட்டுப் பறிமுதல் சம்பவத்தில் ஈடுபட்ட முதன்மைக் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற 3 நபர்களைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

6 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

8 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

13 minutes ago

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

16 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… ஓடும் வாகனங்களுக்கு இடையே நடுரோட்டில் தரையிறங்கிய பாராகிளைடர்…!

ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…

21 minutes ago

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார்… அரசியல் பரபரப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…

29 minutes ago