மகாராஷ்டிரா மாநிலம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் சக்ஷம் டேட் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். அந்த வாலிபர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். எங்கே இது நடந்துவிடுமோ என்ற பயத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர்களும் அவருடைய தந்தையும் வாலிபரை கொடூரமாக தாக்கி சுட்டுக்கொலை செய்து அவரின் முகமே அடையாளம் தெரியாத அளவுக்கு நசுக்கிவிட்டனர்.
இந்த கொடூர கொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது காதலர் கொலை செய்யப்பட்டதை அறிந்த அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து தப்பித்து காதலரின் இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் முகத்தில் மஞ்சள் பூசி பொட்டு வைத்து தன்னுடைய காதலனின் சடலத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த திருமணம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தானே எல்லாம், என் அப்பா அண்ணனின் ஆசை நடக்கவில்லை. அவர்கள் தோற்றுவிட்டார்கள். என் காதலன் வென்று விட்டான்.
அவர்கள் கொலை செய்தது என்னுடைய காதலனை தான், என் காதலை அல்ல. இனி அவரின் மனைவியாக அவர் அப்பா அம்மாவுக்கு மருமகளாக அவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ்வேன். இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய என் குடும்பத்தினருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த பெண் பேசியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…
கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…
இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…