மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுதான் இந்த ஜலசந்தி அனைத்து நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்ட நிலையில், இன்று திடீரென ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த பல்வேறு வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் இந்தியாவின் தேசியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானது இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலசந்தி மூடப்பட்டிருப்பதை அறியாமல் அந்தப் பாதையை கடந்த கப்பல்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இந்தியக் கப்பல்கள் உட்பட பல சர்வதேசக் கப்பல்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவித்து வருகின்றன.
இந்தியக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. ஈரானியப் படையினரின் இத்தகைய ஆக்ரோஷமான நடவடிக்கை குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதோடு, இந்தியக் கப்பல்களைக் குறிவைப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இந்தியா சார்பில் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்தத் திடீர் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர்ச் சூழலிலும் இந்தியக் கப்பல்களுக்கு முன்னுரிமை அளித்து வந்த ஈரான், தற்போது நேரடியாகத் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவிற்கு வர வேண்டிய ஏராளமான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளதால், இது வர்த்தக ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…
தமிழக அரசியலில் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடித் திருப்புமுனை நிகழ்ந்துள்ளது. ஒருகாலத்தில் தமிழகத்தின் அசுர பலம் வாய்ந்த…